பக்கங்கள்

பக்கங்கள்

20 டிச., 2020

வவுனிக்குளத்தில் விழுந்த வாகனம்- மூவரது சடலங்களும் மீட்பு

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு- வவுனிக்குளம் குளத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளான கப் ரக வாகனத்தில் பயணித்த நிலையில் காணாமல்போன மூவரின் சடலங்களும்

கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்

குறித்த விபத்தில் காணாமல்போன ரவீந்திரகுமார் சஞ்சீவன் என்ற 13 வயதுடைய சிறுவன் ஆபத்தான நிலையில் நேற்று மீட்கப்பட்டு மாங்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், தொடர்ந்தும் மேற்கொண்ட தேடுதலில் காணாமல்போன மூவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.