பக்கங்கள்

பக்கங்கள்

7 டிச., 2020

இலங்கை பிரிட்டன் தூதுவரை அழைத்து – மாவீரர் நாள் கார்த்திகை பூ தொடர்பாக கேள்வி கேட்ட சிங்கள அமைச்சர்

www.pungudutivuswiss.com
மாவீரர் தினத்திற்கு முன்னதாக, பிரித்தானிய பாராளுமன்ற கட்டட தொகுதியில், கார்த்திகைப் பூ ஒளியூட்டப்பட்டது. அத்தோடு இலங்கையில் இனப்படுகொலை நடந்தது. எமது மாவீரர்களை நாம் நினைவு கூறுகிறோம் போன்ற வாசகங்களும் சேர்ந்தே மின்னியது. இலங்கை தனது ராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக, தனது கடும் அதிருப்த்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர், சாரா ஹில்டனை சந்தித்த இலங்கை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தனது கடும் அதிருப்த்தியை வெளியிட்டுள்ளார். ஆனால் இந்த நடவடிக்கை தொடர்பாக சாரா எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை.

மேலும் சொல்லப் போனால், இது பிரித்தானிய பொலிசார் விசாரிக்கவேண்டிய வேலை என்று மட்டும் சொல்லி விட்டு அவர் மெளனமாகிவிட்டார் என்கிறார், இச் சந்திப்பில் கலந்து கொண்ட முக்கிய புள்ளி ஒருவர்.