பக்கங்கள்

பக்கங்கள்

11 டிச., 2020

நேற்றும் இருவர் பலி - ஒருவர் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்!

www.pungudutivuswiss.com
கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146ஆக அதிகரித்துள்ளது.கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 66 வயதான பெண் மற்றும் வெலிகம பகுதியைச் சேர்ந்த 54 வயதான பெண் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வெலிகம பகுதியைச் சேர்ந்த பெண், டுபாயிலிருந்து வருகைத் தந்து தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து ஹோமாகம வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அனுமதிக்கப்பட்ட குறித்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.