www.pungudutivuswiss.com
தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழ்ப்பாணத்தில் இன்று பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகள் விடுதலைக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த போராட்டம், நல்லூர் பின் பகுதியில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது |
‘கொல்லாதே கொல்லாதே அரசியல் கைதிகளை கொல்லாதே’, ‘விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகளை விடுதலை செய்’, ‘கொல்லாதே கொல்லாதே அரசியல் கைதிகளும் மனிதர்களே’, ‘சிங்களவர்களுக்கு ஒரு நீதி தமிழர்களுக்கு ஒரு நீதியாக அரசு பாகுபாடு காட்டாதே’, உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை இதன்போது போராட்டக்காரர்கள் எழுப்பியிருந்தனர்.குறித்த போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களில் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.