பக்கங்கள்

பக்கங்கள்

14 டிச., 2020

யாழ் முடக்கம் தொடர்பில் வெளியான அறிவிப்பு! கடும் அதிர்ச்சியில் மக்கள்

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்று காரணமாக முடக்கப்பட்ட உடுவில் பிரதேசம் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் மருதனார்மடத்தில் பி.ஸி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை வெளிவந்த கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்பான தகவலால் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் முடக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே மேற்படி முடக்கம் தற்பொழுது தளர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக நோயாளர்களுடன் தொடர்புடையோரை சுயதனிமைப்படுத்தும் பொறிமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இன்றைய தினமும் யாழில் பல்வேறு ஊர்களிலிருந்தும் பலர் அடையாளம் காணப்பட்டதால் கொரோனா ஆபத்து குறித்து மக்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலை எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்