பக்கங்கள்

பக்கங்கள்

10 டிச., 2020

நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்

www.pungudutivuswiss.com
கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலை யில் நேற்றைய தினம் மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயி ரிழந்தவர்களின் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்துள்ளது.

01. கொழும்பு 15 சேர்ந்த 20 நாள் குழந்தை கொழும்பு லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரத்த விஷமாதல், பல உறுப்பு செய லிழப்பு மற்றும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோ னியா காரணமாக 2020 டிசம்பர் 08 ஆம் திகதி உயிரிழந்துள்ளது.

02. கொழும்பு 10 சேர்ந்த 62 வயதான ஆண் ஒருவர் கொ ழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற் றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2020 டிசம்பர் 09 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அதன் படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை 144 ஆக உயர்ந் துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரி வித்துள்ளது.