பக்கங்கள்

பக்கங்கள்

8 டிச., 2020

ஆண்டின் இறுதிக்குள் சிறைச்சாலைகளில் 8 ஆயிரம் கைதிகளை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்

www.pungudutivuswiss.com
சிறீலங்கா சிறைச்சாலையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலையில் ஒழுக்கத்துடன் செயற்பட்ட கைதிகளை விடுதலை செய்வது குறித்து சிறைச்சாலைகள் அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் சிறைச்சாலைகளில் 8 ஆயிரம் கைதிகளை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இதனை சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
தற்போது சிறீலங்காவில் உள்ள 28 சிறைச்சாலைகளில் 28,915 கைதிகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிறைக் கைதிகளை விடுதலை செய்து குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது