பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜன., 2021

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி டிரா

www.pungudutivuswiss.com
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இரு தரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி டிரா ஆனது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஸ்டீவன் சுமித் விளாசிய சதத்தின் உதவியுடன் 338 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் கில் மற்றும் புஜாராவின் அரைசதம் ரன்கள் குவிய வழிவகுத்தது. எனினும், 3வது நாளில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 100.4 ஓவர்களில் 244 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.


கடைசி 49 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் சாய்த்தனர். ஆஸ்திரேலிய பவுலர்கள் மொத்தம் 37 ஓவர்களை மெய்டனாக வீசி இந்தியாவின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தினர்.

இதன்பின்னர் 94 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 29 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்து மொத்தம் 197 ரன்கள் முன்னிலை