பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜன., 2021

ஹர்த்தாலால் முடங்கியது வடக்கு கிழக்கு

www.pungudutivuswiss.com
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தாலால் வடக்கு கிழக்கு முடங்கியது.
பொதுச் சந்தை, மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன, அரச போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுப்பட்டிருந்தன.
வங்கிகள் மற்றும் அரச நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்த போதும் போது மக்கள் சென்றுவருவது குறைவாகவே இருந்தது.
அத்தோடு பாடசாலைகள் நீண்ட இடைவெளிக்கு பின் ஆரம்பிக்கப்பட்டன. எனினும், மாணவர்களின் வரவில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது