பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2021

பரிசில் பாரிய கொள்ளை! - கிட்டத்தட்ட 500.000 யூரோக்கள் மாயம்

www.pungudutivuswiss.com
பரிசில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அரை மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் சூறையாடப்பட்டுள்ளன.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மணி அளவில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பரிசின் மத்தியில் உள்ள நகைக்கடை ஒன்றே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. கோடாரி துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள் சிலர் கடைக்குள் நுழைந்து கொள்ளையடித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை.
கொள்ளையிடப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு 200.000 யூரோக்கள் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த போதும், தற்போது மொத்த மதிப்பு 500.000 யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது