பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2021

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் திறந்து வைப்பு

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் பொது மக்களின் பாவனைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலைய திறப்பு விழா, யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது

122 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் குறித்த பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நெடுதூர பேருந்து நிலையத்தில் தமிழ் மொழிக்கான முன்னுரிமை புறக்கணிக்கப்பட்டு, சிங்கள மொழிக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அண்மையில் விசனம் வெளியிட்ட யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன் ‘தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படாது விட்டால் தான் பேருந்து நிலைய திறப்பு விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை’ என்று தெரிவித்திருந்தார்.

   
   Bookmark and Share Seithy.com