பக்கங்கள்

பக்கங்கள்

6 பிப்., 2021

சற்று முன்னர் மன்னாரிற்குள் பிரவேசித்த பேரணி! அதிகரிக்கும் பொலிஸாரின் கெடுபிடி!

www.pungudutivuswiss.com
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் கடந்த 3 ஆம் திகதி அம்பாறை பொத்துவிலில் ஆரம்பித்து இன்று நான்காவது நாளாக வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி பேரணியாக சென்று கொண்டிருக்கின்றது.

11.30 மணிக்கு மன்னார் பரையநாளன் குளம் வீதியை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து 12 மணியளவில் மடுவீதியை வந்தடைந்து தற்போது குறித்த ஊர்வலம் மடுவசந்தியிலிருந்து முருங்கன் ஊடாக மன்னார் நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் மன்னாரை சென்றடைந்த பேரணி, மடு நுழைவிடத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பேரணி வாகனங்களை வழிமறித்து பரிசோதனை மேற்கொள்ளவதோடு, வாகனங்களின் இலக்கங்களும் பொலிஸாரால் பதியப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்