பக்கங்கள்

பக்கங்கள்

6 பிப்., 2021

மடு தேவாலயத்தில் வணங்கி தொடரும் பேரணி! இராணுவ வாகனத்தை நோக்கி இராணுவமே வெளியேறு என விண்ணதிரும் கோசங்கள்

www.pungudutivuswiss.com
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி மன்னாரை வந்தடைந்துள்ளது. குறித்த பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சர்வமதத் தலைவர்கள், உள்ளடங்கலாக இளைஞர்களும் , முஸ்லிம் மக்களும் கைகோர்த்துள்ளனர்.

பலத்த பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு இருந்த போதும் சோதனைச் சாவடிகளை தகர்த்தெரிந்து குறித்த ஊர்வலம்-மன்னார் நோக்கி சென்று கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மடு தேவாலயத்தை சென்றடைந்த நிலையில், மடு தேவாலயத்தில் வணக்கத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள். வீதியால் சென்ற இராணுவ வாகனத்தை நோக்கி இராணுவமே வெளியேறு என்று விண்ணதிர கோஷங்கள் எழுப்பியவாறு சென்றோர்.