பக்கங்கள்

பக்கங்கள்

6 பிப்., 2021

தமிழ்த் தேசியம் காக்க அலையென திரண்ட தமிழ்த் தேசிய உணர்வாளர்கள்! வெள்ளாங்குளத்தை அண்மித்த பேரணி

www.pungudutivuswiss.com
மன்னார் நகரிலிருந்து தற்போது வெள்ளாங்குளம் நோக்கி வாகனப் பேரணி தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றது.

வீதிகளெங்கும் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். பல தடைகள் ஏற்பட்டாலும் அத்தனையையும் தகர்த்து தமிழ்த் தேசியத்தைக் காக்கும் உரிமைப் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை எமது தேசம் இங்கே ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு என்ன வேலை என உணர்வாளர்கள் கோசங்களை எழுப்பியவாறு சென்றுகொண்டிருக்கின்றனர்.

வடக்கு கிழக்கு உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் உரிமைக்கான போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு பேராதரவை வழங்கி வருகின்றனர். இது வரை 6 மாவட்டங்களை கடந்து தற்போது கிளிநொச்சி மண்ணை அடைவதற்கான பயணம் தொடர்ந்த வண்ணமுள்ளது.

தமிழ்த் தேசியத்தைக்காக்க அலையென தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் திரண்டுள்ளனர். அவர்களுக்கு முஸ்லிம் பேராதரவு வழங்கும் வகையில் முஸ்லிம் மக்களும் இணைந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது