பக்கங்கள்

பக்கங்கள்

29 மார்., 2021

முல்லைத்தீவை சேர்ந்த கொரோனா தொற்றாளர் அம்பியுலன்ஸ் வண்டியில் மரணம்

கொரோனா தொற்றாளர் ஒருவர் வவுனியாவில் இருந்து அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது, அம்பியுலன்ஸ் வண்டியில் அவர் உயிரிழந்துள்ளார்

. 82 வயதுடைய முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் 

அவருக்கு திடீரென ஏற்பட்ட சுவாச பிரச்சினை காரணமாக அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவர் தொற்றாளர் என்பது உறுதியாகியுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் அனுராதபுரம் பிரதேசத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.