பக்கங்கள்

பக்கங்கள்

16 ஏப்., 2021

அண்ணாவும் தம்பியும் தனி தனியாக செல்லவேண்டும்- மகாராணி கட்டளை- இது தான் பிளான் வரைந்தார் மகாராணியார் !

www.pungudutivuswiss.com
வரும் சனிக்கிழமை(17)ம் திகதி, மாலை 3 மணிக்கு மகாராணியாரின் கணவர் பிலிப் அவர்களின் இறுதி ஊர்வலம் நடைபெறவுள்ள நிலையில். யார் யார் எங்கே நிற்க்க வேண்டும், எந்த உடையை அணிய வேண்டும். மேலும் சொல்லப் போனால் எப்படி நடந்து செல்லவேண்டும் என்ற விதிமுறைகளை தானே வரைந்து கொடுத்துள்ளார் மகாராணியார். இதன் அடிப்படையில் கோட்டையில் இருந்து புறப்படும் வேளை இளவரசர் வில்லியம் பக்கத்தில் அவரது தம்பியும் சர்சைக்குரிய நபருமான ஹரி இருக்க கூடாது என்றும். இவர்கள் நடுவே மைத்துனர் பீட்டர் பில்ஃல்ஸ் இருப்பார் என்றும்.


தேவாலயம் சென்றதும், இளவரசர் ஹரி, ஒரு வரி பின்னால் செல்ல வேண்டும் என்றும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது மகாராணியாரால். கணவர் பிலிப் ஆசைப்பட்டது போல அவரது உடல் பச்சை நிற ரக் வண்டி ஒன்றில் எடுத்துச் செல்லப்பட உள்ளதோடு. ராணுவ மற்றும் பொலிஸ் மரியாதை கொடுக்கப்பட உள்ளது.