பக்கங்கள்

பக்கங்கள்

16 ஏப்., 2021

www.pungudutivuswiss.com
சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவரின் காலில் துப்பாக்கி ரவை உள்ளதால் அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில், அனுமதிக்கப்பட்டுள்ளார், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்வு இணைய புலனாய்வு நிருபர் தெரிவிப்பது என்னவென்றால், சட்டவிரோத மணல் கடத்தல் இடம்பெறுவதாக தகவல் வெளியாகிய நிலையில் அதனை தடுக்கும் நோக்கில் வீதியில் ஆணிகள் பொருத்தப்பட்ட தடைகள் ஏற்படுத்தப்பட்டு வாகனங்களை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும்.

வாகனங்கள் குறித்த தடைகளையும் தாண்டியதுடன் தம் மீதும் மோதியதாகவும் அதன் பின்னரேயே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிரடிப் படை மற்றும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள். துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த மணல் ஏற்றிவந்தவர்களாக கருதப்படும் இருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.