பக்கங்கள்

பக்கங்கள்

30 ஏப்., 2021

BREAKING NEWS லண்டனில் பெரும் ஆபத்து… 77 பேருக்கு இருந்த இந்திய கொரோனா 400 பேருக்கு திடீரென பரவியது

www.pungudutivuswiss.com
கடந்த வாரம் இந்தியாவில் இருந்து லண்டன் வந்த 77 பேருக்கு, இந்திய உரு மாறிய கொரோனா இருப்பது கண்டு பிடிக்கப்பட்ட நிலையில். அவர்கள் அனைவரையும் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தி இருந்தார்கள். மிகவும் ஆபத்தான இந்த உருமாறிய கொரோனா, தற்போது 400 பேருக்கு தொற்றியுள்ளதாக சற்று முன்னர் பிரித்தானிய NHS அறிவித்துள்ளதோடு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. பிரித்தானியாவில் கொரோனா பரவும் எண்ணிக்கை மிக மிகக் குறைவடைந்து செல்லும் நிலையில். இந்த இந்திய கொரோனா தாக்க ஆரம்பித்துள்ளது… இதில் 3 வகை உள்ளதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது… அதாவது…


B.1.617, B.1.167.2 மற்றும் B.1.167. 3 என்று 3 வகையாக பிரித்துள்ளார்கள். இவை மூன்றுமே ஆபத்தான வைரஸ் தான். இவை தடுப்பு மருந்து எடுத்துக் கொண்ட நபர்களை தாக்குமா ? என்பது பெரும் கேள்விக் குறி. ஏன் எனில் நேற்றைய தினம்(29) 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த 5 பேருமே தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டவர்கள். ஆனால் முதல் தடுப்பு மருந்து எடுத்தவர்கள் என்றும். 2ம் தடுப்பு மருந்து எடுக்க வில்லை என்றும் அறியப்படுகிறது