பக்கங்கள்

பக்கங்கள்

2 மே, 2021

125 தொகுதிகளை கைப்பற்றுகிறது திமுக அடுத்த முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின்

www.pungudutivuswiss.com
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அதிக தொகுதிகளில் வென்றுள்ளது. மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.


தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் திமுக முன்னிலை பெற்றாலும் அதிமுகவும் கடுமையான போட்டியை தந்தது. எனினும் நேரம் செல்லச்செல்ல திமுக அதிக இடங்களில் வென்று வெற்றியை உறுதி செய்தது. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி முன்னணி மற்றும் வெற்றியுடன் சேர்த்து 158 இடங்களை கைப்பற்றும் நிலை உள்ளது.

image


Advertisement

VDO.AI

இதில் திமுக மட்டும் 125 தொகுதிகளை வெல்லும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் 17 தொகுதிகளில் வெல்லும் நிலையில் உள்ளது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் தலா 4 இடங்களிலும் இடதுசாரி கட்சிகள் இரண்டும் தலா 2 இடங்களிலும் வெல்லும் நிலையில் உள்ளன. திமுக கூட்டணியில் பிற கூட்டணி கட்சிகள் 4 இடங்களில் வென்றுள்ளன.

திமுக தனிப்பெரும்பான்மை பெறுவது உறுதியாகிவிட்ட நிலையில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். ஆளும் அதிமுக கூட்டணி 76 தொகுதிகளை மட்டுமே பெற்று ஆட்சியை பறிகொடுக்கிறது. அதிமுக 68 இடங்களிலும் பாமக 5 இடங்களிலும் பாஜக 4 இடங்களிலும் வெற்றிபெறும் நிலையில் உள்ளன. அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை எந்த ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை.