பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜூன், 2021

21ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு நீடிப்பு

www.pungudutivuswiss.com
தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு, எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று மாலை தெரிவித்துள்ளார்.

தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு, எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று மாலை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படும் என நேற்று அவர் அறிவித்திருந்தார்.

எனினும், நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு எதிர்வரும் 21ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார் என இராணுவ தளபதி கூறியுள்ளார்.