பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜூன், 2021

இந்தியாவில் இலங்கையை சேர்ந்த 38 பேர் அதிரடி கைது; ஆட்டம் ஆரம்பம்

www.pungudutivuswiss.com
கர்நாடகாவின் மங்களூரு நகரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இலங்கை நாட்டவர்கள் 38- பேரை மங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில், கடந்த மார்ச் மாதத்தில் தமிழகத்திற்கு வந்த இவர்கள்,


அங்கிருந்து, பெங்களூருக்கு வருகை வந்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து மங்களூருக்கு வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இலங்கை நாட்டவர்களுக்கு உதவி செய்த 6-7 பேரை கைது செய்துள்ளோம் என்றும் மங்களூரு காவல் ஆணையர் தெரிவித்துள்ளனர்.