பக்கங்கள்

பக்கங்கள்

19 ஆக., 2022

மதுபோதையில் குத்தாட்டம் போட்டு எல்லோர் மத்தியிலும் விமர்சனத்துக்குள்ளான பின்லாந்து பிரதமர்

www.pungudutivuswiss.com

மதுபோதையில் தனது நண்பர்களுடன் பின்லாந்தின் பெண் பிரதமர் சன்னா மரீன் குத்தாட்டம் போடும் வீடியோ வெளியானதால், அவர் மீது கடும் விமர்சனம்

எழுந்துள்ளது.

பின்லாந்தின் ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் பிரதமராக, சன்னா மரீன் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு சன்னா மரீன் ஆட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பிரதமர் பதவிக்கு அவமரியாதையும், களங்கத்தையும் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதால், அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஊடகங்களும் விமர்சனம் செய்து வருகின்றன.