பக்கங்கள்

பக்கங்கள்

19 ஆக., 2022

தடைகளை நீக்குவதற்கு முன் புலம்பெயர் அமைப்புடன் உரையாடிய பசில்! ஆபத்தாகும் சூழல்”

www.pungudutivuswiss.com

தடைகளை நீக்குவஇலங்கைக்கான நிதிகளை உள்வாங்கும் நோக்கம், ஜெனிவா மனித உரிமை சபையை கையாளுகின்ற உத்தி மற்றும் சர்வதேச ரீதியில் தமிழ் மக்களால் முன்வைக்கப்படும் இன அழிப்பு தொடர்பான கோரிக்கைகளை உள்ளக பொறிமுறையாக மாற்றக்கூடிய ஒரு ஏற்பாடாகவே புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் காணப்படுகின்றது என மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“தற்போது தடை நீக்கப்பட்டுள்ள சில புலம்பெயர் அமைப்புக்கள் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கின்றன. அதேவேளை இந்த அமைப்புக்கள் தடை செய்யப்பட்ட காலங்களிலும் இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து பயணித்துள்ளன.

மேலும், பிரித்தானியாவில் இருக்க கூடிய சுரேன் சுரேந்திரன் தலைமையிலான அமைப்பொன்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் பசில் ராஜபக்சவுடன் இணைய வழி கலந்துரையாடலில் ஈடுப்பட்டிருந்தது. அந்த கலந்துரையாடலில் சுமந்திரனும் கலந்துக்கொண்டார்.”என தெரிவித்துள்ளார்.