பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2022

யாழ்ப்பாணத்தில் மாவீரர் வார நிகழ்வுகள் இன்று ஆரம்பம்

www.pungudutivuswiss.com

 மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளாகிய இன்று  காலை 9 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பருத்தித்துறை கொட்டடி பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் காலை 09.00 மணி அளவில் அஞ்சலி நிகழ்வை செய்ய உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மாவீரர் வார ஆரம்பத்தை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழகம் மாணவர்கள், அஞ்சலி நிகழ்வை இன்று காலை 9மணியளவில் நிகழ்த்த உள்ளனர்.

மேலும் மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு காலை 10 மணிக்கு பளைப்பகுதியில் இடம்பெறவுள்ளது.இதில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொள்ளவுள்ளார் என விழா ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.