பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2022

வரவுசெலவுத் திட்டத்துக்கு மொட்டு நிபந்தனையற்ற ஆதரவு

www.pungudutivuswiss.com

வரவு செலவுத் திட்டத்திற்கு நிபந்தனையின்றி ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்திற்கு நிபந்தனையின்றி ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்

நாடு எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கு பொதுஜன பெரமுன செயற்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் பொதுஜன பெரமுன எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை என கட்டுநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பூரண ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியுடன் இணக்கமாக செயற்படுவேன் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.