பக்கங்கள்

பக்கங்கள்

14 நவ., 2022

சிறையிலிருந்து விடுதலையான நளினி செய்யவிருக்கும் முதல் செயல்!

www.pungudutivuswiss.com

சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு வீட்டிற்கு வந்த நளினி செய்தியாளர்கள் சந்திப்பின் போது முகத்தை மூடி கொண்டு வெட்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான நளினி வேலூரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அங்கு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது திடீரென பின்னால் திரும்பி மோட்டரை அணையுங்கள் என சொன்னார்.

சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு வீட்டிற்கு வந்த நளினி செய்தியாளர்கள் சந்திப்பின் போது முகத்தை மூடி கொண்டு வெட்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான நளினி வேலூரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அங்கு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது திடீரென பின்னால் திரும்பி மோட்டரை அணையுங்கள் என சொன்னார்

இதையடுத்து செய்தியாளர் ஒருவர் குடும்ப தலைவியாக மாறிட்டீங்க என சொன்னார். அதை கேட்டு சிரித்த நளினி முகத்தை தனது இருகைகளால் மூடி கொண்டு வெட்கப்பட்டார்.

பின்னர் நளினி கூறுகையில், சிறையில் ஆன்மீக நாட்டம் அதிகம் வந்தது, காலையில் எழுந்தவுடன் என் வேலைகளை முடித்துவிட்டு லலிதா சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் எல்லாம் படிப்பேன்.

தினமும் தியானம், யோகா செய்வேன். நான் வீட்டிற்கு வந்தவுடன் என் தாயார் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், முதலில் வீட்டருகில் உள்ள கங்கையம்மன் கோவிலுக்கு செல்வேன். தீமிதிக்க வேண்டும் என் மகள் ஹரித்ராவுக்கு துலாபாரம் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.