இதையடுத்து செய்தியாளர் ஒருவர் குடும்ப தலைவியாக மாறிட்டீங்க என சொன்னார். அதை கேட்டு சிரித்த நளினி முகத்தை தனது இருகைகளால் மூடி கொண்டு வெட்கப்பட்டார். பின்னர் நளினி கூறுகையில், சிறையில் ஆன்மீக நாட்டம் அதிகம் வந்தது, காலையில் எழுந்தவுடன் என் வேலைகளை முடித்துவிட்டு லலிதா சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் எல்லாம் படிப்பேன். தினமும் தியானம், யோகா செய்வேன். நான் வீட்டிற்கு வந்தவுடன் என் தாயார் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், முதலில் வீட்டருகில் உள்ள கங்கையம்மன் கோவிலுக்கு செல்வேன். தீமிதிக்க வேண்டும் என் மகள் ஹரித்ராவுக்கு துலாபாரம் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். |