பக்கங்கள்

பக்கங்கள்

2 டிச., 2022

ஒரே நாளில் 240 புகலிடக்கோரிக்கையாளர்களை மீட்ட பிரான்ஸ்!

www.pungudutivuswiss.com

24 மணி நேரத்திற்குள், பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற நூற்றுக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை மீட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திங்கள் முதல் செவ்வாய் வரையிலான 24 மணி நேரத்திற்குள், பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற 240 புகலிடக்கோரிக்கையாளர்களை மீட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

24 மணி நேரத்திற்குள், பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற நூற்றுக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை மீட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திங்கள் முதல் செவ்வாய் வரையிலான 24 மணி நேரத்திற்குள், பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற 240 புகலிடக்கோரிக்கையாளர்களை மீட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

அந்த 240 பேரும், கலாயிஸ் பகுதியில் ஐந்து வெவ்வேறு மீட்பு நடவடிக்கைகளின்போது மீட்கப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை, 426 புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயல்வது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள பிரித்தானிய அதிகாரிகள், முந்தைய வாரத்தில் வானிலை மோசமாக இருந்ததால், வெகு சிலரே ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்றதாக தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவும் பிரான்சும், ஆங்கிலக் கால்வாயை புலம்பெயர்வோர் கடப்பதை தடுப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றில் இம்மாதம் கையெழுத்திட்டனர். அதன்படி, புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக பிரான்சுக்கு பிரித்தானியா வழங்கும் தொகையை அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.