பக்கங்கள்

பக்கங்கள்

2 டிச., 2022

வெளிநாடுகளில் இருந்து தமிழர் பகுதிக்கு வந்த கோடிக்கணக்கான பணம்! அருண் சித்தார்த்தனின் சர்ச்சை தகவல்

www.pungudutivuswiss.com

வெளிநாடுகளில் இருந்து சுமார் மூன்றரை கோடி ரூபா பணம் தமிழ் அமைப்புகளுக்கு வந்துள்ளதாக தெரிவித்து யாழ். சிவில் சமூக செயற்பாட்டாளர் அருண் சித்தார்த்தன் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், ஆயுதம் ஏந்தி உயிரிழந்த பலரின் பெற்றோர் அநாதரவான நிலையில் உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இவ்வாறானதொரு சூழலில் சேகரிக்கப்படும் பணத்தில் ஒருதொகையை அவ்வாறானவர்களுக்காவது பிரித்து கொடுக்க வேண்டும்.

எனினும் நினைவேந்தல்கள் அரசியல்வாதிகளின் பணம் உழைக்கும் நோக்கத்திற்காக தான் செய்யப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.