பக்கங்கள்

பக்கங்கள்

10 டிச., 2022

ஐந்து முறை சாம்பியன் பிரேசில் அணியை உதைத்து வெளியேற்றிய கத்துக்குட்டி குரோஷியா

www.pungudutivuswiss.com
கத்தார் உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி பரிதாபமாக வெளியேறியுள்ளது.

பிரேசில் அணி பரிதாபம்இந்த உலகக்கிண்ண போட்டிகளில் யாரும் எதிர்பாராத  அதிசயங்கள் தொடராக நடக்கின்றன ,பல உதைபந்தாடட ஜாம்பவான்கள் ஒன்றன் பின் ஒன்றாக  வெளியேறும்

பெரிதாபம் அதிசயம் அவற்றை  அடித்து துரத்தும் யாரும் எதிர்பாராத நாடுகளின்  உன்னதம் வாயைப்பிளக்க வைக்கிறது  குழு நிலையிலேயே உதைபந்தாடடாத்தில் எப்போதும் பலமாக திகழும் ஜெர்மனி பெல்சியம் டென்மார்க் வெளியேற தொடர் நோக்கி அவுட் சுற்றுக்களில் கிண்ணத்தை கைப்பற்றலாம் என எதிர்வு கூறப்படட  விருப்பத்துக்குரிய  நாடுகளான  பிரேசில் ,ஸ்பெயின் சுவிஸ் வெளியேறியது.

கத்தார் உலகக் கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட பிரேசில் அணி, காலிறுதி ஆட்டத்தில் குரோஷியா அணியிடம் வெற்றியை இழந்துள்ளது.

ஐந்து முறை சாம்பியன் பிரேசில் அணியை உதைத்து வெளியேற்றிய கத்துக்குட்டி குரோஷியா | Brazil Dumped Out Of World Cup


மிகவும் பரபரப்பாக் நடந்த இந்த ஆட்டத்தில் பெனால்டி ஷூட்அவுட் முறையில் குரோஷியா அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் ஏதுமின்றி சம நிலையில் தொடர, கூடுதல் நேரத்தில் பிரேசில் அணியின் நெய்மர் ஒரு கோல் அடித்து வெற்றிவாய்ப்பை பிரகாசமாக்க,

ஐந்து முறை சாம்பியன் பிரேசில் அணியை உதைத்து வெளியேற்றிய கத்துக்குட்டி குரோஷியா | Brazil Dumped Out Of World Cup

ஆனால் கூடுதல் நேரம் முடிவடைவதற்குள் குரோஷியா அணியின் Bruno Petkovic ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.

இதனையடுத்து பெனால்டி ஷூட்அவுட் முறை கொண்டுவரப்பட்டது. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி பரிதாபமாக வெளியேறியுள்ளது.