பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2022

சிறுமி நீரில் மூழ்கி மரணம்!

www.pungudutivuswiss.com

வடமராட்சி கற்கோவளம் பகுதியில்நேற்று  பிற்பகல் கடலில் நீராடி விட்டு அருகில் இருந்த நீர்த்தேக்கத்தில் நீராடிய 15 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி  உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியை சேர்ந்த குறித்த சிறுமி கற்கோவளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் நான்கு நண்பர்களுடன் கடற்கரைக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கத்தில் நீராடிக் கொண்டிருந்த வேளை நீரில் மூழ்கியுள்ளார்.

வடமராட்சி கற்கோவளம் பகுதியில்நேற்று பிற்பகல் கடலில் நீராடி விட்டு அருகில் இருந்த நீர்த்தேக்கத்தில் நீராடிய 15 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த குறித்த சிறுமி கற்கோவளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் நான்கு நண்பர்களுடன் கடற்கரைக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கத்தில் நீராடிக் கொண்டிருந்த வேளை நீரில் மூழ்கியுள்ளார்

வரவுசெலவுத் திட்டத்துக்கு மொட்டு நிபந்தனையற்ற ஆதரவு

www.pungudutivuswiss.com

வரவு செலவுத் திட்டத்திற்கு நிபந்தனையின்றி ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்திற்கு நிபந்தனையின்றி ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் மாவீரர் வார நிகழ்வுகள் இன்று ஆரம்பம்

www.pungudutivuswiss.com


 மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளாகிய இன்று  காலை 9 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பருத்தித்துறை கொட்டடி பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் காலை 09.00 மணி அளவில் அஞ்சலி நிகழ்வை செய்ய உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளாகிய இன்று காலை 9 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பருத்தித்துறை கொட்டடி பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் காலை 09.00 மணி அளவில் அஞ்சலி நிகழ்வை செய்ய உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.