பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜன., 2023

15 வர்த்தக நிலையங்களில் திருடிய பொருட்களை வைத்து கடை நடத்திய ஆங்கில ஆசிரியர் களுத்துறையில் கைது!

www.pungudutivuswiss.com
breaking

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதினைந்து கடைகளை உடைத்து பல இலட்சம் ரூபா பெறுமதியான  பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் ஆங்கில ஆசிரியர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இந்த ஆங்கில ஆசிரியர்  பண்டாரகம பிரதேசத்தில் திருட்டுப் பொருட்களை சேகரித்து கடையொன்றை நடத்தி வருவதாகவும்  சந்தேக நபரின் அந்தக் கடையில் அனைத்துப் பொருட்களும் ஒரே கூரையின் கீழ் காணப்பட்டதாகவும்  களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பால் மா, சீனி, பருப்பு,  எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் பல பொருட்கள் திருடப்பட்டமை தொடர்பிலான பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது சந்தேகத்தில் ஆங்கில ஆசிரியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.