பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜன., 2023

யாழ். மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

www.pungudutivuswiss.com
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாழ்.மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

இன்று (16.01.2023) திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் செலுத்தப்பட்டது.

யாழ். மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (Photos) | Local Government Election Nomination Jaffna Slfp

யாழ் மாவட்டத்தின் சகல உள்ளூராட்சி சபைகளுக்கும் இதன்போது கட்டுப் பணம் செலுத்தப்பட்டது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 'கை' சின்னத்தில் போட்டியிடவுள்ளது என்று அங்கஜன் இராமநாதன் எம்.பி. இதன்போது தெரிவித்திருந்தார்.