பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜன., 2023

அனைத்து தமிழ் கட்சிகளையும் ஓரணியில் திரளக் கோரி நான்காவது நாளாக போராட்டம்!

www.pungudutivuswiss.com


அனைத்து தழிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள்க என வலியுறுத்தும் வகையிலான போராட்டம் 4வது நாளாக திருகோணமலையில் இடம்பெற்றது. இன்று  வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து தொடர்ச்சியாக குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்து தழிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள்க என வலியுறுத்தும் வகையிலான போராட்டம் 4வது நாளாக திருகோணமலையில் இடம்பெற்றது. இன்று வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து தொடர்ச்சியாக குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகிறது


குறித்த போராட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ,யுவதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கிளிநொச்சி – தருமபுரம் பகுதியிலும் இன்று வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் அரசியல் கட்சிகள் அரசியல் தீர்விற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும், வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள் ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு ஒரு தனி மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும், அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள்க போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டன