பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜன., 2023

பொற்பதியில் நாளை புலிகளின் ஆயுதங்களை தேடி தோண்டும் பணி!

www.pungudutivuswiss.com

கொக்குவில் பொற்பதி வீதியில் தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக  விசேட அதிரடிப்படையினருக்கு  ரகசிய தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

கொக்குவில் பொற்பதி வீதியில் தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக விசேட அதிரடிப்படையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

இதன் படி சந்தேகிக்கப்பட்ட இடத்தினை தோண்டி பார்ப்பதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளது. குறித்த அனுமதிக்கு அமைய தோண்டும் பணி நாளை காலை முன்னெடுக்கப்படவுள்ளது.

கொக்குவில் பொற்பதி வீதியில் விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில் ஆயுதங்கள் மறைத்து இருப்பதாக தெரிவித்து நீதிமன்ற உத்தரவை பெற்று தோண்டும் பணி நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.