பக்கங்கள்

பக்கங்கள்

7 பிப்., 2023

கிழக்கு நோக்கிய பேரணியின் இறுதி நாள் இன்று

www.pungudutivuswiss.com


வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் தமிழர் எழுச்சிப் பேரணி இன்று இரவு 8.00 மணியளவில் மூதூர் -குமாரபுரத்தை சென்றடைந்தது. இதன்போது குமாரபுரம் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு  சுடரேற்றி அஞ்சலி நிகழ்வும் அங்கு  இடம்பெற்றது.

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் தமிழர் எழுச்சிப் பேரணி இன்று இரவு 8.00 மணியளவில் மூதூர் -குமாரபுரத்தை சென்றடைந்தது. இதன்போது குமாரபுரம் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி நிகழ்வும் அங்கு இடம்பெற்றது

யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பமான இப்பேரணி திருகோணமலையின் எல்லைப்பகுதியான வெருகல் பகுதியில் நேற்றிரவு இடைநிறுத்தப்பட்டது.

வெருகலில் தரித்து நிற்கும் பேரணி குழுவினர் இன்று காலை வெருகலிலிருந்து புறப்பட்டு மட்டக்களப்பை சென்றடையவுள்ளனர். இன்று இறுதி நாள் பேரணியும் பொதுக் கூட்டமும் மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.