பக்கங்கள்

பக்கங்கள்

7 பிப்., 2023

கொழும்பிலிருந்த வந்த வழிப்போக்கர்களால் பிழையாக வழிநடத்தப்படுகிறது தமிழரசு கட்சி!

www.pungudutivuswiss.com


2010ஆம் ஆண்டிற்கு பின்னர் கொழும்பிலிருந்த வந்த வழிப்பேக்கர்களாக வந்தவர்கள்தான் இன்று தமிழரசுக் கட்சியை பிழையான வழியில்  அழைத்துச் சென்று கொண்டிருப்பதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சிவநாதன் நவீந்திரா குற்றம் சுமத்தியுள்ளார்.

2010ஆம் ஆண்டிற்கு பின்னர் கொழும்பிலிருந்த வந்த வழிப்பேக்கர்களாக வந்தவர்கள்தான் இன்று தமிழரசுக் கட்சியை பிழையான வழியில் அழைத்துச் சென்று கொண்டிருப்பதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சிவநாதன் நவீந்திரா குற்றம் சுமத்தியுள்ளார்

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நல்லூர் பிரதேச சபை வேட்பாளர் அறிமுக கூட்டம் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றது. இதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.

தேசியத்தலைவரின் சிந்தனையில் உருவான இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைந்து போவற்கு எவரும் அனுமதிக்ககூடாதெனவும் இதனை தொடர்ந்து கட்டிக்காத்து தேசிய தலைவரின் சிந்தனையை முன்நகர்த்தி செல்லவேண்டும் என்றும் சிவநாதன் நவீந்திரா குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்றாவது சின்னமாக குத்து விளக்கினை கொண்டு வந்துள்ளதாகவும் முதலாவது உதய சூரியன் இரண்டாவது சின்னம் வீடாகவும் காணப்பட்டிருந்ததாகவும் இது காலத்தின் கட்டாயம் என்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.