பக்கங்கள்

பக்கங்கள்

3 ஏப்., 2023

விடுதலைப் புலிகளின் ராதா வான்படை உறுப்பினரின் சாட்சியத்தை நிராகரித்து நீதிபதி இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு

www.pungudutivuswiss.com
14 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகளை 
வவுனியா மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

2009ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டுத் தடுப்பு காவலில் இருந்த யாழ். வேலணையை சேர்ந்த இ. திருவருள், யாழ் கரவட்டியை சேர்ந்த ம. சுலக்சன், முள்ளியவளையை சேர்ந்த க. தர்சன் ஆகிய மூவருக்கும் எதிராக வவுனியா மேல்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.


இந்த நிலையில், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், குறித்த மூவரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் விடுவித்து, இன்றைய தினம் (03.04.2023) அவர்களை விடுதலை செய்துள்ளார்.