 கனடாவில் நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்து கனடா சென்ற இளைஞன் திங்கட்கிழமை நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற சமயம் குறித்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. |