பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூன், 2023

கஜேந்திரகுமாரை தாக்கிய புலனாய்வு அதிகாரி! - துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல்

www.pungudutivuswiss.com


வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது புலனாய்வு அதிகாரி ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியுள்ளார்.

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது புலனாய்வு அதிகாரி ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியுள்ளார்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விளையாட்டுக்கழக உறுப்பினர்களை சந்தித்துக் கொண்டிருந்த வேளை, அங்கு சந்தேகத்திற்க்கு இடமான ஒருவர் நடமாடிக் கொண்டிருந்தார்.

அதனை அவதானித்த பாராளுமன்ற உறுப்பினரின் பகுப்பாய்வு அதிகாரி அவரை விசாரித்த போது தன்னை ஒரு புலனாய்வு அதிகாரி என குறிப்பிட்டிருந்தார். அவ்வேனை பகுப்பாய்வு அதிகாரி குறித்த புலனாய்வு அதிகாரியிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரியுள்ளார்

அவ்வேளை அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் குறித்த புலனாய்வு அதிகாரியிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரிய வேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மீது தாக்குதல் நடத்தி துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் அங்கு அவருடன் வருகை தந்திருந்த ஒருவரை பிடித்து பொலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.