பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜூன், 2023

யாழ். மாவட்டத்தில் ஞாயிறுதோறும் தனியார் வகுப்புகளுக்கு தடை! [Friday 2023-06-09 17:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலாளர் ஆ,சிவபாலசுந்தரம் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலாளர் ஆ,சிவபாலசுந்தரம் அறிவித்துள்ளார்

எதிர்வரும் யூலை மாதம் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் தரம் ஒன்று முதல் தரம் ஒன்பது வரையான மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களை நடாத்துவதை இடைநிறுத்தல் தொடர்பில் இன்றைய தினம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள் கல்வியிலாளர்கள் சமூக ஆர்வலர்களின் பங்கு பற்றுதலுடன் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்த விசேட கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதென யாழ் மாவட்ட செயலாளர் ஆ,சிவபாலசுந்தரம் தெரிவித்தார்.