உணவருந்திய பின்னர் சோடா குடித்தவர் மயங்கி விழுந்து மரணம்!
www.pungudutivuswiss.com
உணவகம் ஒன்றில் நேற்று சோடா குடித்தவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். சங்கானை பகுதியை சேர்ந்த ரவீந்திராசா ரசித்தன் (வயது 34) என்பவரே உணவருந்திய பின்னர் சோடா குடித்த வேளை மயங்கி விழுந்துள்ளார்
கடையில் இருந்தவர்கள் அவரை மீட்டு , வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது