பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜன., 2024

நாளை இலங்கை வரும் பிரித்தானிய இளவரசி! - யாழ்ப்பாணமும் செல்கிறார்.

www.pungudutivuswiss.com


பிரித்தானிய இளவரசி ஹேன் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 75 ஆண்டு கால நிறைவை முன்னிட்டு இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் பங்கேற்குமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்புக்கு அமைய, அவரது விஜயம் அமையவுள்ளது.

பிரித்தானிய இளவரசி ஹேன் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 75 ஆண்டு கால நிறைவை முன்னிட்டு இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் பங்கேற்குமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்புக்கு அமைய, அவரது விஜயம் அமையவுள்ளது.

இந்த விஜயத்தின் போது பிரித்தானிய இளவரசியின் கணவர், வைஸ் அட்மிரல் சேர் டிம் லோரன்ஸும் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 13ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர்கள் கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு செல்லவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.