பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜன., 2024

யுக்திய நடவடிக்கை - ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கவலை

www.pungudutivuswiss.com

இலங்கை எதிர்கொள்ளும் போதைப்பொருள் பிரச்சினைக்கு எதிராக அதிகாரிகள் பாதுகாப்பினை அடிப்படையாக கொண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம்  கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கை எதிர்கொள்ளும் போதைப்பொருள் பிரச்சினைக்கு எதிராக அதிகாரிகள் பாதுகாப்பினை அடிப்படையாக கொண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கவலை வெளியிட்டுள்ளது.

இராணுவ வாகனம் மோதி பிரதேச செயலக பணியாளர் மரணம்]

www.pungudutivuswiss.com

 வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் நேற்று  இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வெற்றிலைக்கேணி முள்ளியானை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடையவரே  உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வெற்றிலைக்கேணி முள்ளியானை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ளார்

www.pungudutivuswiss.com
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ளார் இதுவரை விடுதலைப் புலிகளை தடை செய்யாத சுவிசில் புலிகளின் பல அமைப்புகள் பலமாக செயல்பட்டு வருகின்றன உலகெங்கும் இயங்கும் விடுதலைப் புலிகளின் நெட்வொர்க் சுவிசை மையமாகக் கொண்டு இயங்குவதாக இலங்கை அரசு கூறி வருகிறது.
[Saturday 2024-01-13 16:00]

ரணிலையும் சஜித்தையும் இணைக்க வெளிநாட்டு தூதுவர்கள் முயற்சியா?-மறுக்கிறார் சஜித்.

www.pungudutivuswiss.com

ரணிலையும் சஜித்தையும் இணைக்க வெளிநாட்டு தூதுவர்களின் ஊடாக முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வெளியாகும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அதனை முற்றாக நிராகரிக்கிறேன் என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ரணிலையும் சஜித்தையும் இணைக்க வெளிநாட்டு தூதுவர்களின் ஊடாக முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வெளியாகும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அதனை முற்றாக நிராகரிக்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்

மத்திய ஆபிரிக்க குடியரசில் கவிழ்ந்து கிடக்கும் இலங்கை விமானப்படையின் ஹெலி

www.pungudutivuswiss.com

மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கை விமானப்படை ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி பலத்த சேதமடைந்துள்ளது.

மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கை விமானப்படை ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி பலத்த சேதமடைந்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றில் வழக்கு! [Saturday 2024-01-13 06:00]

www.pungudutivuswiss.com

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாட்டு மக்களின் அடிப்படை பேச்சு உரிமை மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது.  மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கு இந்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்கும் வகையில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்மானத்தை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாட்டு மக்களின் அடிப்படை பேச்சு உரிமை மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கு இந்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்கும் வகையில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்மானத்தை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் 19 பேர் காயம்! - 60 பேர் தப்பியோட்டம்

www.pungudutivuswiss.com

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக 19 கைதிகள் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து,  சுமார் 60 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தப்பிச் சென்றவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.