பக்கங்கள்

பக்கங்கள்

31 ஜன., 2025

யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர

www.pungudutivuswiss.com
யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை ஆரம்பமாகி
நடைபெற்று வருகின்றது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறுகின்றது.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட ஆளும் தரப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
மேலும், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், திணைக்கள தலைவர்கள், முப்படைகளின் பிரதிநிதிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், துறைசார் அதிகாரிகள், என பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
Gefällt mir
Kommentieren
Senden
Teilen