உக்ரைன் போருக்கு அடிப்படை காரணங்களான நேட்டோவின் கிழக்கு நோக்கி விஸ்தரிப்பு குறித்தும் சமீபகாலமாக ரஷ்யா சுட்டிக்காட்டி வந்துள்ளது. இந்நிலையில் புதிதாக என்ன விடயங்களை சேர்த்துக்கொண்டுள்ளது இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படுவதற்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ரஷ்யா தயாரா என்ற விபரங்கள் வெளியாகவில்லை. கடந்த மூன்று வாரங்களாக ரஷ்ய அமெரிக்க அதிகாரிகள் இந்த நிபந்தனைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். 30 நாள் யுத்த நிறுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதி இணங்கியுள்ள நிலையில் ரஷ்ய ஜனாதிபதியின் நிலைப்பாட்டை அறிவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் காத்திருக்கின்றார். அதேவேளை முன்னாள் கேஜிபி உறுப்பினரான விளாடிமிர் புட்டின் யுத்த நிறுத்தத்தை பயன்படுத்தி அமெரிக்கா உக்ரைன் ஐரோப்பாவிற்கு இடையில் கருத்துவேறுபாடுகளை உருவாக்க முயல்வார் என அமெரிக்க அதிகாரிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிபுணர்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர் |