பக்கங்கள்

பக்கங்கள்

27 அக்., 2012


அநுராதபுரத்தில் பெருநாள் தினத்தில் பள்ளிவாசல் தீக்கிரை
அநுராதபுரம் மல்வத்து ஓய சிங்க கனுவ பகுதியில் அமைந்துள்ள தக்கியா பள்ளிவாசல் முஸ்லிம்களின் பெருநாள் தினமான இன்று அதிகாலை 2.30 மணியளவில் இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
 

முஸ்லிம்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த வேளையில் இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக தக்கியா பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.