பக்கங்கள்

பக்கங்கள்

6 நவ., 2012


லண்டன் உலகத் தமிழர் மாநாடு : 
மு.க.ஸ்டாலின்,  டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, அருள், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்  பங்கேற்பு 

இங்கிலாந்து தமிழ் பேரவை மற்றும் தமிழர் ஆதரவு இங்கிலாந்து எம்.பி.க்கள் குழு இணைந்து லண்டனில் உலகத்தமிழர் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளன
.

நாளை (7-ந்தேதி) முதல் 9-ந்தேதி வரை மூன்று நாட்கள் மாநாடு நடக்கிறது. இலங்கையில் நடந்த இனப்படுகொலை மற்றும் போர் குற்றம் குறித்து ஐ.நா. சபை முயற்சியில் சர்வதேச சமூகம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கம் ஆகும்.
 

இந்த மாநாட்டில் தமிழ் நாட்டில் இருந்து தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, அருள், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.