பக்கங்கள்

பக்கங்கள்

4 மார்., 2013

சிக்கலில் அணித்தலைவர் மேத்யூஸ், சங்கக்காரா: இலங்கை வீரர்களுக்கு செக் வைத்த வாரியம்
இலங்கை கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் ஏஞ்சலா மேத்யூஸ், டி20 அணித்தலைவர் சந்திமால் மற்றும் மூத்த வீரர் சங்கக்காரா உட்பட 60 வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் திடீரென செக் வைத்துள்ளது.
இலங்கை வீரர்களுக்கான ஒப்பந்தம் கடந்த 28ம் திகதியுடன் முடிவடைந்து விட்டது. புதிய ஒப்பந்தத்தில் மார்ச் 2ம் திகதிக்குள் வீரர்கள் கையெழுத்திட வேண்டும் எனவும் கெடு விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் வீரர்கள் யாரும் நேற்று கையெழுத்திடவில்லை. உலகக் கிண்ணம் நடத்தியதற்காக ஐசிசி வழங்கிய பெருந்தொகையை வீரர்களுக்கு பகிர்ந்தளிக்க வாரியம் மறுப்பதும், ஒரு சில கோரிக்கைகளை வாரியம் கண்டு கொள்ளாததுமே வீரர்கள் ஒப்பந்தத்தை புறக்கணித்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத எந்த ஒரு வீரரையும் வங்கதேச தொடருக்கு தெரிவு செய்யக்கூடாது என்று தேர்வு குழுவினருக்கு வாரியம் உத்தரவிட்டுள்ளது.