அமெரிக்கா Procedural Resolution கொண்டுவரவுள்ளதா ?
இவ்வகையான பிரேரணைகள், முன்னைய நாட்களில் எடுக்கப்பட்டுள்ளதா ? என்ற கேள்விகளுக்கும் தற்போது விடைகிடைத்துள்ளது எனலாம். முன்னைய நாட்களில் இவ்வாறானதொரு பிரேரணையை சில நாடுகள் முன்மொழிந்து நிறைவேற்றியும் உள்ளது. இதுபோன்ற பிரேரணையை ஒரு நாடு கொண்டுவரும்போது அதனை வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகள், தடுக்க முடியாத நிலை தோன்றும். எனவே வரவுள்ள தீர்மாணத்தில் இலங்கைக்கு போதிய அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை இலங்கை தவறவிடும் பட்சத்தில், இலங்கைக்கு எதிராக பாரிய நடவடிக்கை ஒன்றை அமெரிக்கா எடுக்கும். அப்போது , சீனா இல்லையேல் ரஷ்யா போன்ற நாடுகள் நினைத்தாலும் இலங்கையை காப்பாற்ற முடியாது. இதுவே தற்போதைய நிலையாக உள்ளது எனலாம்.